இலங்கை தொடர்பில் தமிழக சட்ட சபையில் தீர்மானம் வேண்டும்
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டி தமிழக சட்ட சபையில் விசேட தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் வை.கோ. இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு பொறிமுறையை முன்னெடுக்க ஆதரவளிக்கும் வகையிலான பிரேரணை ஒன்று ஜெனீவாவில் முன்வைக்கப்படும் என்று அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வால் தெரிவித்திருந்தார்.
உள்நாட்டு விசாரணைகளால் தீர்வுகள் கிடைக்கப்பெறாது என்பதே உண்மை.இந்தநிலையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, விசேட தீர்மானம் ஒன்றை தமிழக சட்ட சபையில் முன்வைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.








