Breaking News

யாஸ்மீன் சூகாவின் கோரிக்கையை நிராகரித்தார் பான் கீ மூன்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியான யாஸ்மீன் சூகா, இலங்கை குறித்து விடுத்த கோரிக்கையை அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் கடமையாற்றி வரும் இலங்கை அமைதி காக்கும் படையினரை திருப்பி அனுப்பி வைக்குமாறு சூகா கோரியுள்ளார்.நான்கு நாடுகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட இலங்கைப் படையினர் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹெட்டி, சூடான் மற்றும் கொங்கோ ஆகிய நாடுகளில் இலங்கைப் படையினர் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கைப் படையினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சூகா, போலி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக  தெரியவருகின்றது.