Breaking News

அறிக்­கையின் பரிந்­து­ரைகள் குறித்து இலங்கை கவ­ன­மெ­டுக்­க­ வேண்டும்! பிரிட்டன் கோரிக்கை

இலங்கை தொடர்­பான ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் அறிக்­கையின் பரிந்­து­ரைகள் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் கவ­ன­மெ­டுக்­க­ வேண்­டு­மென பிரிட்டன் ஜெனி­வாவில் கோரிக்கை விடுத்­துள்­ளது.

ஜெனி­வாவில் நேற்று ஆரம்­ப­மான ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்­டத்­தொ­டரின் முத­லா­வது அமர்வில் கலந்துகொண்டு உரை­யாற்­றிய பிரிட்­டனின் பிர­தி­நிதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்:-

இலங்கை அர­சாங்கம் மேற்­கொண்­டுள்ள முன்­னேற்­றங்கள் தொடர்பில் நாங்கள் எமது வர­வேற்பை தெரி­விக்­கின்றோம். அத்­துடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணை­யா­ள­ருக்கு வழங்­கிய அர்ப்­ப­ணிப்­புக்­களை நிறை­வேற்­று­மாறு இலங்­கையை ஊக்­கு­விக்­கின்றோம்.

அது­மட்­டு­மன்றி, இலங்கை தொடர்­பான ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் அறிக்­கையின் பரிந்­து­ரைகள் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் கவ­ன­மெ­டுக்­க­வேண்டும். மேலும் நம்­ப­க­ர­மான ஆலோ­சனை மிக்க நல்­லி­ணக்க மற்றும் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­யொன்றை உரு­வாக்கி அத­னூ­டாக இலங்­கையில் நிரந்­தர சமா­தா­னத்தையும் நீதி­யையும் நிலை­நாட்­டு­மாறும் நாம் கோரிக்கை விடுக்­கின் றோம் என்றார்.

ஜெனி­வாவில் நேற்று ஆரம்­ப­மான ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத்தொடரில் ஆரம்ப உரையை நிகழ்த்­திய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை நாளை புதன்கிழமை வெளியிடப்படும் என்று உறுதியளித்தார்.