Breaking News

சர்வதேச விசாரணையை மழுங்கடிப்பதற்கு கூட்டமைப்பு முயற்சிப்பது பாரிய துரோகம்!

சர்வதேச விசாரணையை மழுங்கடிக்கச் செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிப்பது அவர்களை நம்பி வாக் களித்த தமிழ் மக்களுக்கு செய்யும் பாரிய துரோகம் என்று சிறி ரெலோ கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது;

நடந்து முடிந்த கொடிய யுத்­தத்தின் இறு­திக்­கட்­டத்தில் மனித இனத்தால் ஜீர­ணிக்க முடி­யாத கொடூ­ரங்கள் நடந்­தே­றி­யமை உல­க­றிந்த உண்மை அவர்­க­ளுக்­கான குறைந்­த­பட்ச நீதி­யை­யா­வது பெற்று விடு­வோ­மென பாதிக்­கப்­பட்ட மக்கள் மற்றும் புலம்­பெயர் உற­வு­க­ளி­னதும் தன்­னார்வ அமைப்­புக்­க­ளி­னதும் அர்ப்­ப­ணிப்­புக்­க­ளி­னாலும் , சனல் 04 போன்ற சில சர்­வ­தேச மற்றும் உள்ளூர் ஊட­கங்­க­ளி­னதும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­னதும் முயற்­சியின் பய­னா­கவும் சர்­வ­தேச விசா­ர­ணை­களை நெருங்­கி­விட்டோம் என்ற நம்­பிக்­கையில் வாழ்ந்த தமிழ் மக்­க­ளுக்கு அண்­மையில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றமும், தான் எதிர் பார்த்­தது நடந்­து­விட்ட மகிழ்­ச்சியில் அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­பட்ட மன­மாற்­றமும் இம் மாதம் ஜெனி­வாவில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள இலங்கை தொடர்­பான விசா­ரணை அறிக்­கையை நீர்த்து போக வைத்­து­வி­டுமோ என்ற அச்­சத்தில் இருந்த தமிழ் மக்­க­ளுக்கு தாங்கள் மலைபோல் நம்­பி­யி­ருந்த தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் அண்­மைக்­கால நட­வ­டிக்­கைகள் 'மண்­கு­தி­ரையை நம்பி ஆற்றில் இறங்­கி­விட்­டோமே' என்று புலம்ப வைத்­துள்­ளது.

குறிப்­பாக கூட்­ட­மைப்பின் தாய்க்­கட்­சி­யான தமி­ழ­ர­சுக்­கட்­சிக்குள் இருக்­கின்ற ஒரு­சி­லர் ­இ­லங்கை அர­சாங்­கத்­தையும் இரா­ணு­வத்­தையும் காப்­பாற்றும் முயற்­சியில் இறங்­கி­யுள்­ள­மையும் அதற்கு கையூட்­டாக அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­க­ளுக்கு நிக­ரான சலு­கை­க­ளைக்­கொண்ட பத­வி­களை பெற்­றுக்­கொண்­டுள்­ள­மையும் மக்கள் மத்­தியில் விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது அது­மட்­டு­மன்றி ஒட்­டு­மொத்த தமிழ் சமூ­கமும் சர்­வ­தேச விசா­ரணை தொடர்பில் சிந்­தித்­து­கொண்­டி­ருக்க இவர்கள் தாம் பெற்­றுக்­கொண்ட பத­வி­க­ளுக்கு பாராட்டு விழாக்­களும் வர­வேற்பு கொண்­டாட்­டங்­களும் பெரும் பொருட் செலவில் நடத்­திக்­கொண்­டி­ருப்­பது மிகுந்த வருத்தத்தை தந்துள்ளது.

எனவே நாமும் தொடர்­ச்சி­யாக பல தோல்­வி­களை சந்­தித்த போதும் தமிழ் மக்கள் மத்­தியில் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான அர­சி­யலை தீவி­ரப்­ப­டுத்த தயங்­கி­யது இவர்கள் மக்­க­ளுக்கு எதுவும் செய்­யா­விட்­டாலும் நடந்த மனித உரிமை மீறல்­க­ளுக்கும், போர் குற்­றங்­க­ளுக்கும், இன­ அ­ழிப்­புக்கும் எதி­ராக புலம்­பெயர் உற­வுகள் எடுக்கும் முயற்­சி­க­ளுக்கு உத­வு­வார்கள் என்ற நம்­பி­க்கை­யில்தான் எமது அர­சி­யலை கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக இல்­லாமல் அர­சாங்­கத்தில் இருக்கும் எமது தமிழ் மக்­களின் வளப் பறிப்­பா­ளர்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுத்­து­வந்தோம். இதனால் பல இழப்­புக்­க­ளையும் அவ­மா­னங்­க­ளையும் சந்­தித்தோம் இன்று அவை எல்­லாமே பொய்த்­து­விட்­டன.

தமிழ் மக்கள் தாம் உண­விற்கு கூட கையேந்த வேண்­டிய நிலையில் இருந்து கொண்டும் சலு­கை­க­ளுக்கு சோரம் போகாமல் உங்­களை நம்பிக் வாக்க­ளித்து வரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு நீங்கள் துரோகம் செய்­வதை அந்த இறை­வன்­ கூட பொறுத்­துக்­கொள்ள மாட்டான்.

இலங்கை பாரா­ளு­மன்ற வரலாற்றில்

முதல் தமிழ் எதிர்க்­கட்சி தலை­வ­ராக இருந்த தமிழர் விடு­த­லைக் ­கூட்­ட­ணியின் தலைவர் அமிர்­த­லிங்கம் தமி­ழீழ கோரிக்­கையை முவைத்து இலங்­கையின் இரண்­டா­வது பெரிய கட்­சி­யாக வெற்­றி­யீட்டி இயல்­பா­கவே எதிர்க்­கட்சி தலை­வ­ராக அமர்ந்­த­ பின்பு தமிழ் இளை­ஞர்­களின் உணர்வுகளை உதாசீனம் செய்ததின் விளைவை இவ்வளவுகாலமும் நாங்கள் அனுபவித்தது போதும். இனியும் உங்களது தான்தோன்றித்தனமான முடிவுகளினால் வரலாற்று தவறுகளை விடுக்காமல் தமிழ் மக்களுக்கு உண்மையாக நடந்து கொள்ளுங்கள். முடியாவிட்டால் நீங்கள் அரசாங்கத்துடன் இணைவதாக நேரடியாக மக்களிடம் கூறி வாக்குகளை பெற்று அரசாங்க சுகங்களை அனுபவியுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.