அடிதடியில் முடிந்த கிரிக்கெட் போட்டி - அதிர்ச்சி காணொளி
தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று எப்போதாவது உலகக் கிண்ணத்தில் கண்ணுக்கு புலப்படும் அணி பெர்முடா. இந்த நாட்டில் உள்ளூர் போட்டிகள் நடைபெற்றன. ஒரு போட்டியில் கிளெவேலண்ட் கவுன்ட்டி கிரிக்கெட் கிளப் அணியியும் வில்லோ கட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின
ஆட்டம் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. வில்லோ அணியின் ஓ பிரைன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கும் கிளெவேலண்ட் அணியின் விக்கெட் காப்பாளர் ஜேசன் ஆண்டர்சனுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு பின்னர் வன்முறையாக மாறியது. ஒரு கட்டத்தில் ஓ பிரைன் துடுப்பால் ஜேசன் ஆண்டர்சனை ஓங்கி அடித்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாக துடுப்பு அவர் மீது படவில்லை. ஆனால், அதன்பின் ஜேசன் ஆண்டர்சன் ஓ பிரைனை கீழே தள்ளி ஆக்ரோஷமாக தாக்கினார்.
இதனால் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்ககூடாது என்று எண்ணிய அணி மானேஜர் மற்றும் நடுவர்கள் மைதானத்திற்குள் விரைந்தனர். அதேவேளையில் பொலிசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களும் மைதானத்திற்குள் விரைந்தனர். அதன்பின் சண்டை விலக்கிவிடப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட பிறகு கிளெவேலண்ட் அணியின் விக்கெட் காப்பாளர் ஜேசன் ஆண்டர்சனுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. ஓ பிரைனுக்கு 6 மாதம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் கிளெவேலண்ட் 72 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.