கே.பியை இந்தியாவிடம் ஒப்படைக்க தயார்- இலங்கை அரசு அறிவிப்பு
கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தி கோருமானால் அவரை இந்தியாவிடம் கையளிக்க அரசாங்கம் தயார் என முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை சமபத்துடன் தொடர்புள்ளதாக கூறி குமரன் பத்மநாதனை இந்தியா கோரினால் அவரை இந்தியாவிடம் கையளிக்க தயார் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவர் தொடர்பான சாட்சியங்கள் பல மஹிந்த ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இவர் தொடர்பாக விசாரணை நடத்துவதில் சிக்கல்கன் ஏற்பட்டுள்ளதாகவும் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.








