Breaking News

சம்பந்தன் எதிர் கட்சி தலைவரானதால் மகசின் சிறைச்சாலையில் பதற்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இன்று எதிர்கட்சி தலைவராக தெரிவாகியதன் பின்னர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் செல் நம்பர் J பிரிவில் அடைக்கப்பட்ட கணிசமான தமிழ் அரசியல் கைதிகள் சித்திரவதைக்குட்பட்டுள்ளனர்.

அப் பகுதிக்கு மாலை 4:00 மணியளவில் குறித்த J பிரிவுக்கு சென்ற சிறைக் காவலர்கள் எதிர்க் கட்சி தலைவராக உங்கள் தலைவரா தெரிவாகியுள்ளார் எனக் கேட்டு தாக்கியதோடு, இது எங்களுடைய நாடு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது எனக் கேள்விகளைக் கேட்டவாறே அரசியல் கைதிகளை நிர்வாணப்படுத்தியதுடன் அடைமழைக்குள் அவர்களை தள்ளிவிட்டு அவர்களது போர்வைகளையும் வீசி எறிந்துள்ளனர்.

இவ்வாறு மிகவும் அநாகரிகமான முறையில் தமிழ்க் கைதிகளை காவலாளிகள் நடத்தியதாக பெயர் குறிப்பிட விரும்பாத சிறைக்கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.1983ம் ஆண்டு அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதிலும் இவ்வாறு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சித்திரவதைக்குட்பட்டுள்ளனர்.

அதே போன்றே இன்று இரா.சம்பந்தன் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றதன் பிற்பாடு இவ்வாறு சிறைச்சாலைக் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டமை 1983ம் ஆண்டு வெடித்த கலவரம் போன்று மீண்டும் வெடித்துவிடுமா என சிறைக்கைதிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் அன்றைய அதாவது 1983ம் ஆண்டு நடந்த சிறைச்சாலை வதையின் போதும் இன்றைய எதிர்க்கட்சி பதவியேற்பின் பின்னரும் ஏற்பட்ட சிறைச்சாலை வதையின்போதும் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியில் இருந்கமை குறிப்பிடத்தகது