Breaking News

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவு – ஜேர்மன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஜேர்மன் இலங்கைக்கு தரவாக செயற்டுமென உறுதியளித்துள்ளது.


இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் பிராங்க் வோல்டர் ஸ்டெயின்மெயர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பிற்கு அமைய ஒருநாள் விஜயமாக இலங்கை வந்திருந்த ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.

பிராங்க் வோல்டர் ஸ்டெயின்மெயரின் இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிளவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதேவேளை, ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை எட்டுவதை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் ஜேர்மன் அரசாங்கம் திருப்தி அடைவதாக இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது நாட்டுக்கு விஜயம் செய்ய வேண்டும் என்ற ஜேர்மன் அதிபர் ஏங்கலா மேர்கல் சார்பான அழைப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு ஸ்டெய்ன்மெயர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரிபல் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுமெனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது, நல்லிணக்க செயற்பாடுகள், காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நிரந்தர அலுவலகம், உள்ளக பொறிமுறையிலான விசாரணைகளை சரவதேசத்தின் உதவியுடன் மேற்கொள்ளல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது மங்கள சமரவீரவினால் பிராங்க் வோல்டர் ஸ்டெயின்மெயருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.