Breaking News

ஐ.எஸ்ஸிலிருந்து விலகுவோர் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவில் இருந்து வெளியேறுப வர்களின் எண்ணிக்கை
அதிகரித்திருப்பதாக அவ்வாறு வெளியேறியவர்களின் வாக்குமூலத்தை மேற்கோள்காட்டி புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

தீவிரவாதம் தொடர்பான சர்வதேச ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,ஐ.எஸ்ஸில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் வெளியேறியும் வெளியேற முயன்றும் வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சக முஸ்லிம்களை கொடுமை யாக நடத்துவது மற்றும் அமைப்புக்குள் இஸ்லாமிய பண்புகள் இல் லாமை போன்றவையே இவ்வாறு வெளியேறுவதற்கு முக்கிய கார ணம் என்று அந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் இந்தியாவில் இருந்து ஐ.எஸ்ஸில் இணைந்த ஒருவர் அந்த குழுவுக்குள் சமத்துவம் இல்லை என்றும் இனவாதம் செயற் படுவதாகவும் குற்றம் சாட்டியுள் ளார். “இது ஒரு புனிதப்போரல்ல” என்று அந்த இந்திய நாட்டவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது தோலின் நிறம் காரணமாக தம்மை கழி வறையை சுத்தம் செய்ய பயன்படு த்தியதாக அந்த இந்திய நாட்டவர் ஐ.எஸ். மீது குற்றம்சாட்டியிருந்தார். மறுபுறம் ஐ.எஸ்ஸில் வெளி நாட்டினருக்கே அதிக அந் தஸ்து வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டு சிரிய நாட்டைச் சேர்ந்தவர்களில் சிலர் அந்த குழுவில் இருந்த விலகி யுள்ளனர். இவ்வாறு ஐ.எஸ்ஸில் இருந்து விலகிய 58 பேரது வாக்கு மூலங்கள் அந்த அறிக்கையில் பதிவு செய்யப் பட்டுள்ளது.