2020ம் ஆண்டு வரையில் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – ஜனாதிபதி
எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாண நிகழ்வுகளில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இந்த அரசாங்கம் நீண்ட காலத்திற்கு நிலைக்காது என சிலர் கூறுகின்றனர். சிலர் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என்கின்றார்கள்.
நான் தெளிவாக கூறுகின்றேன் இந்த அரசாங்கத்தை 2020ம் ஆண்டுக்கு முன்னதாக கலைக்க முடியாது.நான் தெளிவாக கூறுகின்றேன் இந்த அரசாங்கத்தை 2020ம் ஆண்டுக்கு முன்னதாக கலைக்க முடியாது.
இந்த அரசாங்கம் குறைமாத குழந்தையொன்றை பிரசவிக்கும் என எவரும் எதிர்பார்க்க வேண்டாம்.இந்த வலுவான அரசாங்கத்தை பலவீனப்படுத்த எவராலும் முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.








