Breaking News

19 இராஜாங்க, 21 பிரதி அமைச்சர்கள்! அமைச்சர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்தது

ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக்கட்­சியும் இணைந்து அமைத்­துள்ள கருத்­தொ­ரு­மை­வாத தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­சர்­களின் எண்­ணிக்கை 86 ஆக உயர்­வ­டைந்­துள்­ளது.

இதுவரை 46 அமைச்­சர்­களும் 19 இரா­ஜாங்க அமைச்சர்­களும் 21 பிர­தி­ய­மைச்சர்­களும் தேசிய அரசாங்­கத்தில் பத­வி­யேற்­றுள்­ளனர். அந்­த­வ­கையில் நேற்­றைய தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் மூன்று அமைச்­சர்­களும் 40 பிரதி மற்றும் இரா­ஜாங்க அமைச்­சர்­களும் பத­வி­யேற்­றனர்.

ஏற்­க­னவே கடந்த வெள்ளிக்­கி­ழமை 43 அமைச்­சர்கள் பத­வி­யேற்­றி­ருந்­தனர். அதன்­படி தற்­போது மொத்­த­மாக தேசிய அர­சாங்­கத்தில் 86 பேர் அமைச்சுப் பத­வி­களை ஏற்­றுள்­ளனர்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்­றைய தினம் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஒரு­வரும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் இரு­வரும் அமைச்­ச­ரவை அமைச்­சர்­க­ளாக பத­வி­யேற்­றனர். அதன்­படி மலிக் சம­ர­விக்­ரம சர்­வ­தேச வர்த்­தக அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக பத­வி­யேற்­றுக்­கொண்டார்.

மேலும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பைசர் முஸ்­தபா மாகாண சபைகள் உள்­ளூ­ராட்­சி­மன்ற அமைச்­ச­ரா­கவும் விஜித் விஜ­ய­முனி சொய்சா நீர்ப்­பா­சன அமைச்­ச­ரா­கவும் பத­வி­யேற்­றுக்­கொண்­டனர்.

அதன் பின்னர் நேற்று பிற்­பகல் 2 மணி­ய­ளவில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் பிரதி மற்றும் இரா­ஜாங்க அமைச்­சர்கள் 40 பேர் பத­வி­யேற்­றுக்­கொண்­டனர். இரா­ஜாங்க அமைச்­சர்­களில் ஐக்­கிய தேசிய கட்­சியின் 12 பேர் இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளா­கவும் சுதந்­திரக் கட்­சியின் 7 பேர் இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இரா­ஜாங்க அமைச்­சர்கள்

குறிப்­பாக இரா­ஜாங்க அமைச்­சர்­களை பொறுத்­த­வரை ஐக்­கிய தேசிய கட்­சியின் ருவன் விஜ­ய­வர்த்­தன பாது­காப்பு அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். கடந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தில் பாது­காப்பு அமைச்­ச­ராக பணி­யாற்­றிய நிலையில் இம்­மு­றையும் அதே இரா­ஜாங்க அமைச்சை அவர் பொறுப்­பேற்­றுள்ளார். அத்­துடன் ஐக்­கிய தேசிய கட்­சியின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் சிறுவர் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

வி.இரா­தா­கி­ருஷ்ணன் கல்வி இரா­ஜாங்க அமைச்­ச­ரா­க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த அரசாங்கத்திலும் கல்வி இராஜாங்க அமைச்சராக செயற்பட்டிருந்தார்.லக்ஷ்மன் யாப்பா அபே­வர்த்­தன நிதி இரா­ஜாங்க அமைச்­ச­ரா­கவும் சுஜீவ சேன­சிங்க வெளி­நாட்டு வர்த்­தக இரா­ஜாங்க அமைச்­ச­ரா­கவும் எம்.எச். ஹிஸ்­புல்லா மீள்­கு­டி­யேற்ற இரா­ஜாங்க அமைச்­ச­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அத்துடன் ஏ.எச்.எம்.பௌஸி தேசிய ஒருமைப்பாட்டு இராஜாங்க அமைச்சராகவும் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே நீர்வழங்கல் நீர் விநியோக இராஜாங்க அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். பாலித்த ரங்­கே­பண்­டார தொழிற்­ப­யிற்சி இரா­ஜாங்க அமைச்­ச­ரா­கவும் நிரோஷன் பெரெரா கொள்கை மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் இரா­ஜாங்க அமைச்­ச­ரா­கவும் பொறுப்­பேற்­றுள்ளார்.

பிரதி அமைச்­சர்கள்

பிர­தி­ய­மைச்­சர்­களை பொறுத்­த­வரை 21 பேர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியை சேர்ந்த 09 பேரும் ஐக்­கிய தேசிய கட்­சியை சேர்ந்த 12 பேரும் பிர­தி­ய­மைச்­சர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த பைசல் ஹாஸிம் சுகாதார பிரதி அமைச்சராகவும் எச்.எம்.ஹரீஸ் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் தயாகமகேவின் பாரியாரான அனோமா கமகே பொற்றோலியம் வளத்துறை பிரதி அமைச்சராக கடந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தில் பிரதி வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக செயற்­பட்ட அஜித் பி. பெரெரா இம்­முறை மின்­சக்தி பிர­தி­ய­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

ஹர்ஷ வெ ளிவி­வ­கா­ரத்­துக்கு

புதிய பிரதி வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக ஹர்ஷ டி. சில்வா பொறுப்­பேற்­றுள்ளார். கரு­ணா­ரட்ன பர­ண­வி­தான மாகாண சபைகள் உள்­ளூ­ராட்­சி­மன்ற பிர­தி­ய­மைச்­ச­ரா­கவும் எரான் விக்­ர­ம­ரட்ன அரச தொழில்­வாய்ப்பு அமைச்­ச­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமீர் அலி கிரா­மிய பொரு­ளா­தார பிர­தி­ய­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அதன்­படி நேற்­றைய தினம் 40 பிரதி மற்றும் இரா­ஜாங்க அமைச்­சர்கள் பத­வி­யேற்­றுக்­கொண்­டுள்­ளனர்.

46 பேர் அமைச்­ச­ர­வையில்

இந்­நி­லையில் அமைச்­ச­ரவை அமைச்­சர்­க­ளாக இது­வரை 46 பேர் பத­வி­யேற்­றுக்­கொண்­டுள்­ளனர். 33 பேர் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­ணியின் சார்­பிலும் 13 பேர் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் சார்­பிலும் அமைச்­சர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் 33 அமைச்சுப் பத­வி­களில் முஸ்லிம் காங்­கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஜாதிக ஹெல உறு­மய கட்­சி­க­ளுக்­கான அமைச்சுப் பத­வி­களும் உள்­ள­டங்­கு­கின்­றன.

இரா­ஜாங்க அமைச்­சர்­களில் சுதந்­திரக் கட்­சியை சேர்ந்த 7 பேரும் ஐக்­கிய தேசிய கட்­சியின் 12 பேரும் இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளாக பொறுப்­பேற்­றுள்­ளனர்.

பிர­தி­ய­மைச்­சர்­களை பொறுத்­த­வரை ஐக்­கிய தேசிய கட்­சியின் 12பேரும் சுதந்­திரக் கட்­சியின் 09 பேரும் பத­வி­யேற்­றுள்­ளனர்.

2 அமைச்­சர்கள் பத­வி­யேற்பர்

மேலும் இரண்டு அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். அந்த இரண்டு பத­வி­களும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­க­ளுக்கு கிடைக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

5 பிரதி அமைச்­சர்கள் வருவர்

அத்­துடன் மேலும் ஐந்து பிரதி மற்றும் இரா­ஜாங்க அமைச்சுப் பத­விகள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளன.

நடந்து முடிந்த 8 ஆவது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி 106 ஆச­னங்­க­ளையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 95 ஆச­னங்­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது. இந்­நி­லையில் இரண்டு கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைக்கப் போவ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தேர்­தலில் வெற்­றி­பற்­றதும் அறி­வித்தார்.

அதனை அடுத்து இரண்டு வரு­டங்­க­ளுக்கு தேசிய அர­சாங்­கத்தை அமைத்துக் கொள்­வ­தற்­கான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் கைச்­சாத்­திட்­டது. எனினும் உட­ன­டி­யாக தேசிய அர­சாங்­கத்தில் அமைச்­ச­ர­வை­யினால் பத­வி­யேற்க முடி­யாமல் போனது. அமைச்சுப் பத­வி­களை பகிர்ந்து கொள்­வ­திலும், தேசிய அர­சாங்­கத்தின் பொறுப்­புக்­களை பகிர்­வ­திலும் நிலவி வந்த இழு­பறி நிலை கார­ண­மாக அமைச்­ச­ரவைப் பத­வி­யேற்பு தொடர்ந்து இழு­பறி நிலை காணப்­பட்­டது.

இந்­நி­லையில் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்ட பேச்சுவார்த்தைகளின் பயனாக இறுதியில் அமைச்சுப் பதவி பகிர்வு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை 42 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அதற்கு முன்னர் வெ ளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர பொறுப்பேற்றிருந்தார்.

தற்போது மேலும் மூன்று அமைச்சரவை அமைச்சர்களும் 40 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் நேற்று பதவியேற்றுள்ளனர். அதன்படி மொத்தமாக ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள தேசிய அரசாங்கத்தில் 86 பேர் அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.