Breaking News

புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பாலியல் பாலத்காரம் ஒரு தந்திரோபாயமாக பயன்படுத்தப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பாலியல் பாலாத்காரம் ஒரு தந்திரோபாயமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளராக பணியாற்றிய ஹலரி கிளிண்டனின் பகிரங்கப்படுத்தப்பட்ட மின்னஞ்சலில் உள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.2009 ஆம் ஆண்டு செம்டெம்பர் 30 ஆம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து உடனடியாகவே அப்போதைய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, மற்றும் மனித உரிமை அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ராஜீவ விஜயசிங்க ஆகியோருக்கு ஹிலரி கிளிண்டன் விளக்கம் கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.