Breaking News

இராஜாங்க, பிரதி அமைச்சர் நியமன வைபவம் ஒத்திவைக்கப்பட்டது!

இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் நியமன வைபவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்த வைபவம் இன்றுக் காலை நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அந்த வைபவம் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறும் என்று செயலகம் அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றுக்காலை கூடுவதால் இந்த வைபவம் பிற்போடப்பட்டுள்ளது.