Breaking News

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பந்தனும் பாடம் எடுக்கவுள்ளார்! இரண்டு நாள் செயலமர்வு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வொன்று நாளை மற்றும் மறுநாள் ஆகிய இரண்டு தினங்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் அதன் உறுப்பினர்களுக்கு போதிய விளக்கங்களை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கமாகும். நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திசாநாயக்க இதனை ஏற்பாடு செய்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாளை காலை ஆரம்பமாகும் முதல் நாள் அமர்வின் சிறப்பு அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐரோப்பிய ஆணைக்குழு, இங்கிலாந்தின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஆகியோரும் இந்த அமர்வில் விசேட உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.

நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் விளக்கவுரையொன்றை நிகழ்த்தவுள்ளமை இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.