பறிமுதல் செய்யப்படவுள்ள மஹிந்தவின் சொத்துக்கள்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறவினர்களுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்வதற்குரிய
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு, லஞ்ச ஊழல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு உள்ளிட்ட விசாரணை ஆணைக்குழுக்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகள் யாவும் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அரச வளங்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை, அரசாங்கத்திற்கு சொந்தமான பணத்தினை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டமை நிறுபனமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தவறாக சம்பாதிக்கப்பட்ட பணம் CSN தொலைக்காட்சி சேவையை நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றும் வியாபாரம் ஒன்று சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்த காரணங்களை கருத்தில் கொண்டு CSN தொலைக்காட்சி சேவை உள்ளிட்ட பல முக்கிய சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.








