சிறுபான்மையினருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவதற்கு தயார் : ஞானசார தேரர்
சிறுபான்மையினருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவதற்கு தமது அமைப்பு தயாராகவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த அரசாங்கம் சிறுபான்மையினரின் நலன்களில் காட்டும் கரிசனையில் சிறு அளவு கூட பெரும்பான்மையினர் குறித்து சிந்திப்பதில்லை.
இன்றைக்கு நல்லாட்சி, நல்லிணக்கம் குறித்து பேசிக்கொண்டு அமைச்சர்கள் கிறிஸ்தவ பாதிரிகளையும், இந்துக்குருக்களையும், முஸ்லிம் மௌலவிமாரையும் அழைத்து அமைச்சுக் காரியாலயங்களில் கூடிக்குலாவுகின்றனர். ஆனால் எங்களைக் கலந்து கொள்ளாமல் எந்தவொரு நல்லிணக்கமும் இந்த நாட்டில் சாத்தியப்படாது.
தொடர்ந்தும் இந்த அரசாங்கம் எங்களைப் புறக்கணித்துவிட்டு, சிறுபான்மை மக்களைத் தாலாட்டிக் கொண்டிருந்தால் நாங்கள் எங்களது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.








