புதிய பட வில்லனுக்கு பிரியாணி விருந்து கொடுத்த அஜித்
அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹசான் நடித்து வருகிறார்.
மேலும், லட்சுமி மேனன் தங்கை வேடத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் அஜித்துடன் இரண்டு வில்லன்கள் மோதுகின்றனர். பாலிவுட்டை சேர்ந்த கபீர் சிங் இப்படத்தில் முதல் வில்லனாக நடித்தார்.
இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்தியாவிலும், வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இரண்டாவது வில்லனாக சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ஆதவன்’ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த ராகுல் தேவ் நடித்து வருகிறார். விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தற்போது அஜித் படத்தில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.
அஜித் படமென்றாலே அவர் பரிமாறும் பிரியாணி மிகவும் பிரபலம். அதேபோல், இந்த படத்தின் வில்லனான ராகுல் தேவுக்கும் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் அஜித்.
இதுகுறித்து ராகுல் தேவ் கூறும்போது, தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா குழுவுடன் இணைந்து வீட்டில் செய்த பிரியாணியுடன் ஜாலியாக சாப்பிட்டோம். அவர்களுடைய உபசரிப்பு ரொம்பவும் நன்றாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
அஜித்தின் பிரியாணிக்கு மயங்காதவர்கள் யாருமே கிடையாது. அந்த வகை