ஐ.நா பொதுச் சபையின் 70 ஆவது கூட்டத் தொடர் நியூயோர்க்கில் இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 70 ஆவது பொதுச் சபைக் கூட்டம் நியூயோர்க்கில் இன்று (25) ஆரம்பமாகவுள்ளது.அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழுவினரும் கலந்து கொள்ளவுள்ளனர் .
சமாதானம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமை ஆகியவற்றின் கீழ் எதிர்கால பயணம் என்ற தொனிப்பொருளில் இம்முறை ஐ.நா பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளதுஇன்று பரிசுத்த பாப்பரசர், ஐநா செயலாளர் நாயகம், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுச் சபையில் உரை நிகழ்த்தவுள்ளனர்.
ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தை முன்னிட்டு நியூயோர்க்கில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 30 ஆம் திகதி ஐ.நா பொதுச் சபையில் உரைநிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.








