Breaking News

இலங்கையில் சுதந்திரமான சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் : லீ ஸ்கொட்

ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணையகத்தின் 30 வது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட உத்தேச தீர்மானம் குறித்த விளக்கக்கூட்டம் நடைபெற்றவேளையில் பிரித்தானியாவின் இல்பேர்ட் வடக்கு தொகுதிக்கான கொன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் கருத்து தெரிவிக்கையில்;

பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினரான நான் கடந்த 10 வருடங்களாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துவருவதுடன் தமிழர்களின் தூதுவராகவும் இருக்கின்றேன்.

இலங்கையில் இறுதிப்போரில் நடைபெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் மனிதப்படுகொலைகளுக்கு சுதந்திரமான சர்வதேச விசாரணையே தேவை எனக் கூறுகின்றேன்.

போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். நீதி விசாரணையின்போது சாட்சியாளர்கள் பாதுகாக்கப்படவேண்டும். எனவே என்னைப்பொறுத்த வரையில் சுதந்திரமான சர்வதேச விசாரணையே இலங்கையில் நடத்தப்படவேண்டும்.

ஐக்கியநாடுகள் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுப்பதுடன் அவர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் தெரிவித்தார்.