ஐ.சி.சி நடுவர் குழுவில் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் தலைவர் ரிச்சி ரிச்சார்ட்சன்
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் நடுவர் குழுவில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் ரிச்சி ரிச்சார்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் வீரரான ரோஷன் மகானாமா ஐ.சி.சி.யின் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தார்.இவரது பதவிக்காலம் இந்த வருட இறுதியில் முடிவடையும் நிலையில், அவருக்குப் பதிலான ரிச்சி ரிச்சார்ட்சன் ஐ.சி.சி நடுவர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ரிச்சார்ட்சன் கூறுகையில், கிரிக்கெட்டின் முக்கிய பதவிகளில் ஒன்றான இது தனக்கு கவுரவம் அளிப்பதாகவும், மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விடயமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது 53 வயதாகும் ரிச்சி ரிச்சார்ட்சன் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 24 டெஸ்ட் போட்டிகளிலும், 87 ஒருநாள் போட்டிகளிலும் தலைவராக பதவி வகித்துள்ளார்.
மேலும், 89 டெஸ்ட் (5646 ஒட்டங்கள்) மற்றும் 224 ஒருநாள் (6248 ஓட்டங்கள்) போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டிலிருந்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் மேலாளர் பதவியில் இருந்து வருகிறார்.