Breaking News

கடைசி நிமிடத்தில் தூங்காவனம் படத்திற்கு சிக்கல்

ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா நடித்துவரும் படம் தூங்காவனம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் கடைசி நேரத்தில் ஒரு சில காட்சிகள் எடுக்க வேண்டும் என்று படக்குழுவினர் மீண்டும் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்களாம்.

விரைவில் அக்காட்சிகளும் படமாக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.