கணவருடன் பிறந்த நாள் கொண்டாடிய ராதிகா
ரஜினியுடன் ´கபாலி´யில் ஜோடி சேர்ந்துள்ள ராதிகா ஆப்தே, சமீபத்தில் அதிகமாக பேசப்பட்டார்.
இவர் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. ராதிகா ஆப்தே 2005–ம் ஆண்டு ‘வாஹ்லைப் ஹோ தே ஹைசி’ படத்தின் மூலம் இந்தி படஉலகத்துக்கு அறிமுகம் ஆனார். 2012–ல் ‘தோனி’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் இடம் பிடித்தார். இந்தி, தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த ஆண்டு மட்டும் 10–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2½ வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. கணவர் பெயர் பெனடிக்ட். அவர் லண்டனில் இருக்கிறார். தற்போது ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால் ராதிகா ஆப்தே மகிழ்ச்சியுடன் இருக்கிறார். நேற்று முன்தினம் இவருக்கு 30–வது பிறந்த நாள்.
இதை லண்டன் சென்று கணவர் பெனடிக்ட்டுடன் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடினார். இதுகுறித்து கூறிய ராதிகா ஆபதே, ‘எனது வாழ்வின் முக்கியமான ஆண்டு இது. மகிழ்ச்சியான பிறந்த நாளும் இதுவே’ என்று தெரிவித்தார்.