Breaking News

சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து யாழ்.நோக்கி நடைபயணம் - சிவாஜி அழைப்பு

வட, கிழக்கு தமிழர் தாயகத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையினைக் கோரி கவனயீர்ப்பு நடைபயணம் ஒன்றை நடத்தவுள்ளதாக வடமாகா ணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த நடைபயணம் எதிர்வரும் 10 ம் திகதி கிளிநொச்சி நகரில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

தமிழர் தாயகத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை ஒன்றை தமிழர்கள் கேட்டிருக்கும் நிலையில் உள்ளக விசாரணை பொறிமுறை ஒன்றே வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் 14 ம் திகதி ஜெனீவா செல்லவிருந்த நாம் அதனை பிற்போட்டு இந்த நடைபயணத்தை தொடங்கவுள்ளோம். எதிர்வரும் 10 ம் திகதி கிளிநொச்சி நகரில் இருந்து தொடங்கி 5 தினங்கள் நடந்து நல்லூர் ஆலயத்தை அடைய தீர்மானித்துள்ளோம். இதன்போது வரும் வழியில் உள்ள கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்திக்கவுள்ளோம். இதில் அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், சிவில் சமூகம் சார்ந்தவர்கள் பங்கெடுக்கவுள்ளனர் என்றார்.