எட்டு ராஜபக்சக்களுக்கு எதிராக அமெரிக்காவில் அழைப்பாணை
அமெரிக்காவிலுள்ள எட்டு ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை அந்நாட்டு நீதிமன்றம் கோரியுள்ளதாக தெரிய வருகிறது.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் “பொரின் பொலிஸ்” சஞ்சிகை இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அமெரிக்கப் பிரஜைகளான பசில் ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ,துமிந்த மேனோஷ் ராஜபக்ஷ, புஷ்பா ராஜபக்ஷ, தேஜானி ராஜபக்ஷ,பிசல்கா ராஜபக்ஷ,டட்லி ராஜபக்ஷ மற்றும் சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோருக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.