மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மயிலிட்டி பிரதேச மக்கள் அடையாள உண்ணாவிரதம்
யாழ்ப்பாணம் – மயிலிட்டி பிரதேச மக்கள் தங்களை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி இன்று செவ்வா ய்க்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்தாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இடம்பெயர்ந்து 26 வருடங்கள் கடந்தும் இதுவரை மீள்குடியேற்றப்படாதை கண்டித்தும், மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டு, தாங்கள் மீள்குடியமர்த்தப்படுவதன் மூலமே வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பமுடியும் என பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்னர்.