Breaking News

சிறுமியை கொன்றது நானே‬! ஒப்புக்கொண்டார் சந்தேகநபர்

கொடதெனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 

நேற்று கம்பஹா - படுவத்துகொட வனப் பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைதான சந்தேகநபர் தானே அதனைச் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என, பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரயந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

இவர் நேற்றையதினம் பிரதேசவாசிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டதுடன். சந்தேகநபர், குறித்த சிறுமி வசித்த வீட்டுக்கு அருகாமையில் தற்காலிகமாக வசித்த ஒருவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.