Breaking News

"போர்க்களத்தில் ஒரு பூ' நாளை ஜெனிவாவில்

இந்­தி­யாவில் தயா­ரிக்­கப்­பட்ட 'போர்க்­க­ளத்தில் ஒரு பூ' என்ற ஆவ­ணப்­படம் நாளை வியா­ழக்­கி­ழமை ஜெனிவா மனித உரிமைப் பேரவை வளா­கத்தில் திரை­யி­டப்­ப­ட­வுள்­ளது. 

இறுதி யுத்­தத்தில் கொலை செய்­யப்­பட்ட இசைப்­பி­ரி­யாவின் வாழ்க்கை வர­லாற்றை விப­ரிக்கும் வகையில் இந்த ஆவ­ணப்­படம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தி­யாவைச் சேர்ந்த கு. கணேசன் என்­ப­வரால் இயக்­கப்­பட்ட இந்த ஆவ­ணப்­ப­டத்தை திரை­யி­டு­வ­தற்கு இந்­தி­யாவில் தடை­வி­திக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே ஜெனி­வாவில் எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை இந்த ஆவ­ணப்­படம் திரை­யி­டப்­ப­ட­வுள்­ளது.

இசைப்­பி­ரி­யாவின் பிறப்பு, அவ­ரது இளம் பராயம், மற்றும் அவர் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்­டமை இறு­தியில் கொலை செய்­யப்­பட்­டமை போன்ற அனைத்து விட­யங்­க­ளையும் இந்த ஆவ­ணப்­படம் சித்­த­ரிப்­ப­தாக அமைந்­துள்­ளது.

எனினும் இந்த ஆவ­ணப்­ப­டத்தை திரை­யி­டு­வதன் மூலம் இலங்கை - இந்­தியா உறவில் விரிசல் ஏற்­படும் என்றும் இசைப்­பி­ரி­யாக கொல்­லப்­பட்­ட­மைக்­கான ஆதா­ரங்கள் இல்லை என்­ப­தாலும் திரைப்­ப­டத்தை இந்­தி­யாவில் திரை­யிட அனு­ம­திக்க முடி­யாது என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே நாளை போர்க்­க­ளத்தில் ஒரு பூ என்ற ஆவ­ணப்­படம் ஜெனி­வாவில் திரைப்­ப­ப­ட­வுள்­ளது. இதே­வேளை இந்த திரைப்­ப­ட­மா­னது யுத்­த­கா­லத்தில் இசைப்­பி­ரியா எவ்­வாறு கொல்­லப்­பட்டார் என்­ப­தையும் அவரின் வாழ்க்கை வர­லாற்­றையும் சிறந்த முறையில் சித்­த­ரிப்­ப­தாக அமையும் என்று ஆவ­ணப்­ப­டுத்தின் இயக்குர் கு. கணேசன் எம்­மிடம் தெரி­வித்தார். அத்­துடன் தமிழ் மக்கள் எதிர்­கொண்ட மற்றும் அவர்­க­ளுக்கு எதி­ராக இழைக்­கப்­பட்ட அநீ­திகள் என்­ப­வற்றை எடுத்­துக்­காட்­டு­வ­தாக ஆவ­ணப்­படம் அமையும் என்று அவர் கூறினார்.

இந்­தி­யாவைச் சேர்ந்த தெலுங்கு இனத்தைச் சேர்ந்த ஒருவரே இந்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். அவர் ஆவணப்படத்திற்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டதையடுத்து சுகவீனமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.