Breaking News

காதல் திருமணமாம் - ஆர்யா; காதலி யார்?

பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். 

ஆர்யா, கிருஷ்ணா, தீபாசன்னதி, சுவாதி ஆகியோர் நடித்து, விஷ்ணுவர்தன் டைரக்ஷனில், யு.டி.வி. நிறுவனம் தயாரித்து வெளிவர இருக்கும் படம், ‘யட்சன்.’ இந்த படத்தை பற்றி நிருபர்களுக்கு ஆர்யா பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஆர்யா இவ்வாறு பதிலளித்தார். 

கேள்வி:- வீட்டில், உங்களுக்கு பெண் பார்ப்பதாக பேச்சு வந்ததே? 

பதில்:- அந்த கஷ்டத்தை நான் என் பெற்றோர்களுக்கு கொடுக்க மாட்டேன். காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். 

அதற்கு என் பெற்றோர்களும் சம்மதிப்பார்கள். எனக்கு மணமகளாக வரப்போகிறவர் நடிகையாக இருப்பாரா அல்லது வேறு ஒரு பெண்ணா? என்பதை முடிவு செய்யவில்லை என்றார்.