அமைச்சுப் பதவி பகிர்வில் மக்கள் அதிருப்தி! சந்திரிக்கா
சிலருக்கு அமைச்சுப் பதவி வழங்கியமை குறித்து மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மக்களினால் நிராகரிக்கப்பட்ட மக்களினால் வெறுக்கப்பட்ட சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையினால் நாட்டின் முற்போக்கு கொள்கையுடைய மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கமொன்றை அமைத்த காரணத்தினால் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் வேறும் மாற்று வழிகள் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது முகப் புத்தகத்தில் இது பற்றி தெரிவித்துள்ளார்.








