Breaking News

முன்னணி இனவாதி ஞானசார தேரர்! மனோ கணேசன்

இலங்கையின் முதலாவது இனவாதி ஞானசார தேரர் என தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வினொன்றினில் அமைச்சர் இதனைக்குறிப்பிட்டார்.நாடாளுமன்ற தேர்தலில் நாகபாம்பு சின்னத்தில் போட்டியிட்ட இவ் இனவாத கட்சியை சிங்கள மக்களும் தோற்கடித்தமையிலிருந்தே அக் கட்சியை எவ்வாறு மக்கள் நோக்குகின்றனர் என புலனாவதாக குறிப்பிட்டார்.

இலங்கையின் முதலாவது இனவாதியான தேரர் தன்னை நோக்கி இனவாதியென குறிப்பிடுவது நகைப்பிற்குரிய விடயமெனவும் இவ்விடயம் சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமனானதெனவும் தெரிவித்தார்.

இனவாத கருத்துக்களை பதிவுசெய்யாது தேசிய ஒற்றுமைக்கு வழிவகுக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஞானசார தேரரும் பொதுபல சேனாவும் செயற்படவேண்டும் எனவும் அமைச்சர் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.