Breaking News

சர்வதேச விசாரணையை தவிர்க்க விக்ரமபாகு யோசனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை உள்ளிட்ட மரண ங்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க, வசிம் தாஜூடின் போன்றோரின்  கொலைகள் தொடர்பிலும், பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பிலும், இராணுவ புலனாய்வு பிரிவு ஒன்று சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது யுத்த குற்றமாக அமையுமா? இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவான காரணங்களை முன்வைத்து நீதி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே யுத்த குற்றங்கள் குறித்த உள்நாட்டு விசாரணை மேற்கொள்ள இலங்கைக்கு இயலுமை உள்ளது என்று சர்வதேச நாடுகள் நம்பிக்கை கொள்ளும் எனவும் விக்ரமபாகு கருணாரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.