Breaking News

இலங்கையிடம் வாக்குறுதி பெற்றது சீனா

இடைநிறுத்தப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான உத்தரவாதத்தை, இலங்கை அரசாங்கத்திடம் இருந்து சீனா பெற்றுள்ளது.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்து. சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சரும், சீன அரசின் சிறப்பு தூதுவருமான லியூ சென்மின், இலங்கை ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் நடத்திய பேச்சுக்களின் போதே, இதற்கான உத்தரவாதம் பெறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, சீனாவின் சிறப்புத் தூதுவர் இந்தப் பயணத்தின் போது, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுகளை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.