மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்ல தயாராகிறார் மஹிந்த
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தனது தரப்பு சட்டத்தரணிகளின் ஆட்சேபணைகளை கருத்தில் கொள்ளாமல் நடந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்ல எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
பாரிய நிதி மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் மஹிந்த ராஜபக்ச நேற்று ஆஜராகியிருந்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது, பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டு, அதனூடாகவே பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தான் வேட்பாளர் என்பதனால் இதில் தனக்கு தொடர்பில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பிலேயே இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.








