இந்திய மீனவர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்படாது – அரசாங்கம்
இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்யும் திட்டம் எதுவும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாஇ நட்புடன் கூடிய அயல்நாடு என்ற அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். எனினும் சர்வதேச கடற்பரப்பில் அத்துமீறும் போது கடைப்பிடிக்கப்படும் சட்ட தண்டனைகளை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதி தடை இந்த வருட ஆரம்பத்தில் நீக்கப்படும் அறிவிப்பு வெளியானநிலையில் 36 ஒழுங்களை இலங்கை நிறைவேற்ற வேண்டியிருந்தது. எனினும் அதில் சர்வதேச கடற்பரப்பு சட்டமீறல்களுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்படவில்லை என்பதை ஒன்றியம் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்தநிலையில் சர்வதேச கடற்பரப்பில் அத்துமீறுவோர் தொடர்பில் அதிகரிக்கப்பட்டுள்ள தண்டனைகள்இ இலங்கை கடற்பரப்பில் தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு பொருந்தாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்








