Breaking News

எக்னெலிகொட கொலை தொடர்பில் கோதபாயவிடம் விசாரணை


ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட கொலை தொடாபில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

குற்ற விசாரணைப் பிரிவினர் இந்த விசாரணைகளை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கோதபாய ராஜபக்ஸ தற்போது வெளிநாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.நாடு திரும்பியதும் இது குறித்து வாக்கு மூலமொன்று பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எக்னெலிகொட சம்பவம் குறித்த விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில உயர் இராணுவ அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர்.பிரகித் எக்னெலிகொடவை கொலை செய்ய கடந்த அரசாங்கத்தின் முக்கிய அதிகாரம் கொண்ட ஒருவர் உத்தரவிட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

எக்னெலிகொட கொலை தொடா்பிலான விசாரணைகளுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறதுகொலை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

எக்னெலிகொட கொலை தொடர்பில் ஏற்கனவே இரண்டு இராணுவ கேணல்கள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.