Breaking News

மீனவர்களை விடுவிக்க தி.மு.க தொடர்ந்து செயற்படும் : ஸ்டாலின்

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க திராவிட முன்னேற்றக்கழகம் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக அதன் நிதிச்செயலாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2016ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தல் குறித்த கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்படும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவித்த அவர், இதற்கு இரு நாட்டு அரசாங்கமும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்தார்.

குறிப்பாக நாகப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் மாத்திரம் 31பேர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், தொடர்ந்து நீடிக்கும் மீனவர் பிரச்சினையை தீர்க்க தமது கட்சி மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.