Breaking News

"பொதுநலவாய நாடுகளின் விசாரணை என்பது கொலை கா­ரனே விசா­ர­ணை­யாளர் போன்­றது"

பொது­ந­ல­வாய அமைப்பின் தலை­வ­ராக இலங்கை இருக்­கின்­ற­போது, அந்த அமைப்­பி­லுள்ள நாடுகள் இலங்­கையை எப்­படி குற்­றஞ்­சாட்டும்? எனவே இலங்கை மீதான பொது­ந­லவாய நா­டு­களின் விசா­ரணை என்­பது கொலை­க்கா­ரனே விசா­ர­ணை­யாளர் போன்­றது என்று நாம் தமிழர் கட்­சியின் தலைமை ஒருங்­கி­ணைப்­பாளர் சீமான் தெரி­வித்­துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

இலங்­கையின் மீது தலை­யீ­டற்ற ஒரு சர்வதேச விசா­ர­ணை­யைத்தான் சர்­வ­தேசச் சமூ­கத்­திடம் நாம் கோரு­கிறோம். ஆனால், பொது­ந­ல­வாய அமைப்­பி­லுள்ள நாடு­கள்தான் இலங்கை மீது போர்க்­குற்ற விசா­ர­ணையைச் மேற்கொள்ளும்என்­கி­றார்கள்.பொது­ந­ல­வாய அமைப்பின் தலை­வ­ரா­கவே இலங்கை இருக்­கி­ன்ற­போது அந்த அமைப்­பி­லுள்ள நாடு

கள் இலங்­கையை எப்­படி குற்­றப்­ப­டுத்தும்? இந்த விசா­ரணை எப்­படி நேர்­மை­யாக இருக்கும்? என்ற கேள்வி நமக்கு எழு­கி­ன்றது. கொலை­செய்த கொலை­க்கா­ரனே விசா­ர­ணை­யின்­போது கூடவே இருந்து விசாரிப்பான் என்றால், அந்த விசாரணை எப்படி நீதியைப் பெற்றுத் தரும் என கேள்வி எழுப்பியுள்ளார்.