Breaking News

அமெரிக்காவின் முன் இலங்கை தற்கொலை செய்துகொண்டுள்ளது

ஜெனிவா மாநாட்டில் வெளி­யி­டப்­பட்ட யுத்தக் குற்றம் தொடர்­பான உள்­ளக விசா­ரணை என்ற இலட்­சினை பொறிக்­கப்­பட்ட சர்­வ­தேச விசா­ர­ணைக்கு இணக்கம் தெரி­வித்து இலங்கை அர­சாங்கம் அமெ­ரிக்கா முன்­னி­லையில் தற்­கொலை செய்­து­கொண்­டுள்­ளது என தேசிய ஒருங்­கி­ணைப்பு ஒன்­றி­யத்தின் தலைவர் கலா­நிதி. குண­தாஸ அம­ர­சே­கர தெரி­வித்தார்.

கொழும்பு அப­யா­ராம விஹா­ரையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­தேச சக்­தி­களின் சதி­யி­லி­ருந்து நாட்டை காப்­பாற்றி விட்­ட­தாக மிகப்­பெ­ரிய பதா­கை­களை காண்­பித்து நாட்டு மக்கள் முன்­னி­லையில் போலி நாடகம் ஒன்று அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­ப­தியின் அமெ­ரிக்க விஜ­யத்தின் போது அவர் எத­னையும் சாதிக்­க­வில்லை. மாறாக அமெ­ரிக்கா தனது தேவையை நிறை­வேற்­றி­க­் கொண்­டுள்­ளது.

அமெ­ரிக்கா முன்னர் வெளி­யிட்­டி­ருந்த அறிக்­கையில் எவ்­வித மாற்­றமும் செய்­யா­ம­லேயே கடந்த மாதம் பிரே­ர­ணையை தாக்கல் செய்­தி­ருந்­தது. கலப்பு நீதி மன்றம் என்ற வார்த்தை பிர­யோ­கிக்­கப்­ப­டா­மையும் உள்­ளக விசா­ரணை என்ற இலட்­சினை பொறிக்­கப்­பட்ட சர்­வ­தேச விசா­ரணை தொடர்­பி­லான அறிக்கை வெளி­யி­டப்­பட்­ட­மையும் தான் நாம் அவ­தா­னித்த வேறு­பா­டு­க­ளாக உள்­ளன.

குறித்த அறிக்­கையில் 6 ஆவது சரத்தின் படி அது எவ்­வித மாற்­றமும் செய்­யப்­ப­டாத பிரே­ரணை என்­பதை அறிந்­து­கொள்ள முடியும். அதன் படி அமெ­ரிக்­காவின் இந்த செயற்­பாட்­டிற்கு இரண்டு பிர­தான கார­ணங்கள் உள்­ளன. ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையின் யுத்தக் குற்ற விசா­ர­ணையை எந்த நீதி மன்­றமும் ஏற்­றுக்­கொள்­ளாது. அதனால் தான் மிகவும் சூட்­ச­ுமமான முறையில் காய்­ந­கர்த்தி அமெ­ரிக்கா தற்­போது இலங்­கையை முழு­மை­யாக சர்­வ­தேசம் சார்ந்த விசா­ர­ணைக்கு இணங்கச் செய்­துள்­ளது. இதுவே முதற் கார­ணி­யாகும்.

மற்­றைய கார­ணி­யா­னது எமது நாடு இந்த பிரே­ர­ணையின் பிர­காரம் விசா­ரணை செய்ய முன்­வ­ராத பட்­சத்தில் எமது நட்பு நாடு­களின் எதிர்ப்­பையும் அமெ­ரிக்கா எதிர்­நோக்க வேண்­டி­யி­ருக்கும். இதி­லி­ருந்தும் அமெ­ரிக்கா தன்னை பாது­காத்­துக்­கொண்­டுள்­ளது. ஆனால் எமது நாட்டு ஜனா­தி­பதி அறிக்­கையை வெற்­றி­கொண்­ட­தாக தாம் மார்­தட்­டிக் கொண்­டி­ருக்­கின்றார். இது இலங்கை அமெ­ரிக்­காவின் முன்­னி­லையில் தற்­கொலை செய்து கொண்­ட­தற்கு நிக­ரா­னது என்­பதே எமது நிலைப்­பாடு.

அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து இலங்கை வந்­ததும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றை நடத்­தினார். அதன் போது தேச­பற்­றுள்ள இயக்­கங்கள் அவரை அமெ­ரிக்­காவின் கை பொம்மை என சாடி­யி­ருந்­த­தாக குறிப்­பிட்­டி­ருந்தார். அவர் வருந்­தி­னாலும் அவரை அவ்­வாறு கூறு­வதே நியா­ய­மா­னது.

கடந்த சில நாட்­க­ளாக அவர் எமது நாட்டு மக்கள் மத்­தியில் உரை­யாற்றும் போது பிரித்­தா­னியா, பிரான்ஸ் ,அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடு­களின் கருத்­துக்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்க வேண்டும் என்றும் அந்­நா­டு­க­ளுடன் வலு­வான உறவை பேண வேண்டும் என்றும் குறிப்­பி­ட்டி­ருந்தார். அப்­போது அவரை நாம் வேறு எவ்­வாறு குறிப்­பி­டு­வது?

இவ்­வாறு நாட்டை தற்­போ­தைய தலை­வர்கள் காட்­டி­க்கொ­டுத்­து­விட்டு தமது தவ­று­களை மறைப்­ப­தற்­காக முன்னர் அமைச்­ச­ராக இருந்த போது தருஷ்மன் அறிக்­கைக்கு எதி­ராக விமல் வீரவன்ச உப­வாசம் இருந்­த­மையும் வெள்­ளை­யர்கள் இலங்கை வந்த போது அவர்­களை அவ­ம­தித்­த­மையும் தான் அறிக்­கையின் காரம் அதி­க­ரிக்க காரணம் என கூறு­கின்­றனர். இதன்­மூலம் அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­ப­வர்­களின் முட்­டாள்­தனம் வெளிப்­ப­டு­கின்­றது.

அன்று எமது நாட்­டுக்கு வந்த வெளி­நாட்­ட­வர்கள் பிர­பா­க­ரனை காப்­பாற்றிச் செல்­லவே வந்­தனர். அவர்கள் செய்­வது தவ­றில்லை என்றால் தேசப்­பற்­றுள்­ள­வர்கள் நாட்டை காப்­பது எவ்­வாறு தவ­றாக முடியும் என்ற கேள்­வியை அர­சாங்­கத்­திடம் கேட்­கின்றோம். எவ்­வா­றா­யினும் நேபா­ளத்தில் தற்­போது 4 சமஷ்டி ஆட்­சி­யுள்ள பிராந்­தி­யங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­மையை போன்று எமது நாட்­டையும் பிளவு படுத்­து­வதே அமெ­ரிக்­காவின் நோக்கம்.

மறு­புறம் எமது நாட்டில் சர்வ கட்சி மாநாடு இடம் பெறவுள்ளதாக தகவல் வெளியாகின்றது. தேசிய அரசாங்கத்தை அமைத்த பின்னர் எதற்காக சர்வகட்சி மாநாடு? சர்வ கட்சி மாநாடு தற்போது நடத்த வேண்டியதல்ல. ஐ.நா. அறிக்கைக்கு முகம் கொடுக்கும் முன்னரேயே மாநாடு நடத்தப்பட்டு சகல கட்சிகளினுடைய நிலைபாடு தொடர்பிலும் ஆராய்ந்து பார்க்கப்பட்டிருக்க வேண்டும்.

தேசிய அரசாங்கத்தில் பங்கு கொண்டது போன்று இந்த மாநாட்டிலும் எதிர்க்கட்சிகள் பங்கேற்க கூடாது. மாறாக எதிர்ப்பையே வெளியிட வேண்டும்.