Breaking News

தீர்மானத்தை வலுவிழக்கச் செய்ய கடைசி நேரத்தில் சமந்தா பவரின் காலைப் பிடித்தார் மங்கள

 
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னர், நியூயோர்க்கில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்தப்பின் போது, ஐ.நாவுக்கான அமெரிக்காவின் துணைத் தூதுவரும்,  இலங்கையில்அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றியவருமான மிச்சேல் ஜே சிசனும் கலந்து கொண்டார்.

ஜெனிவாவில் அமெரிக்கா முன்வைத்த தீர்மான வரைவில் இறுதிநேரத் திருத்தங்கள் சிலவற்றை மேற்கொள்ளவே,  இலங்கை வெளிவிவகார அமைச்சர் சமந்தா பவரை சந்தித்தாக கூறப்படுகிறது.

முன்னதாக, அமெரிக்கா முன்வைத்த முதலாவது தீர்மான வரைவில், அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பதம், மாற்றியமைக்கப்பட்டவுடன், ஜெனிவாவில் தங்கியிருந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவசரமாக நியூயோர்க் சென்று சமந்தா பவரை சந்தித்து பேசியிருந்தார்.

இதன் போது, அமெரிக்காவின் தீர்மான வரைவு வலுவிழக்கச் செய்யப்படக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.