உயிர் அச்சுறுத்தல் குறித்து மேர்வின் சில்வா முறைப்பாடு
உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா முறைப்பாடு செய்துள்ளார்.
நரேஹேன்பிட்டி காவல்துறையினர் இந்த விவகாரம் குறித்து கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிடம் தெரிவித்துள்ளனர்.இனந்தெரியாத நபர்களினால் தமக்கு தொலைபேசி அழைப்பு மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக மேர்வின் சில்வாஇ காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் காவல்துறையினர் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.விபரங்களை வழங்குமாறு நீதிமன்றம் தொலைபேசி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.








