எவன்காட் ஆயுதக் களஞ்சியம் குறித்த அறிக்கை இன்று கையளிப்பு
எவன்காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் குறித்து கடற்படையினர் மேற்கொண்ட விசாரணை அறிக்கை இன்று பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஆயுதங்களுடன் எவன்காட் கப்பல் ஒன்று கடந்த 5ம் திகதி இலங்கை கடற் பகுதிக்குள் வந்தது, குறித்த கப்பலின் கேப்டன் வழங்கிய தவறான தகவல் காரணமாக அந்தக் கப்பல் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இதன்படி இது தொடர்பில் கடற்படைத் தளபதியின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, இன்று அந்த அறிக்கை பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன் பின்னர் சுயாதீன குழுக்கள் மூலம் இது குறித்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இதேவேளை குறித்த கப்பல் தற்போது கடற்படையினர் வசம் உள்ளதோடு, விசாரணைகள் முடியும் அது விடுவிக்கப்படாது என, முன்னதாக கடற்படைத் தளபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








