எங்களது கணக்குகள் வெளிநாடுகளில் கிடையாது – நாமல் ராஜபக்ச
தமக்கோ, தமது சகோதரர்களுக்கோ வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அதி முக்கிய பிரபு ஒருவரின் புதல்வர் டுபாயின் பிரபல வங்கியொன்றில் இரகசிய கணக்கு ஒன்றில் பாரியளவு பணத்தை வைப்புச் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.எனினும் தமக்கோ தமது சகோதரர்களுக்கோ குறித்த வங்கியில் கணக்கு கிடையாது என நாமல் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
தமது தாய் தந்தைக்கும் இவ்வாறு கணக்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை அரசுடமையாக்கும் நோக்கில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பெருந்தொகைப் பணம் வைப்புச்செய்யப்பட்டுள்ளதனை டுபாய் வங்கி அதிகாரியொருவர் உறுதி செய்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்னவும் தெரிவித்துள்ளார்.எனினும்இ இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும்இ தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் சேறு பூசும் நோக்கில் இவ்வாறு குற்றம் சுமத்தப்படுவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.








