மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி யாழில் முஸ்லிம்கள் போராட்டம்
யாழ் முஸ்ஸிம் மக்கள் 1990ம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது என்னும் கருப் பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
யாழ் மாவட்ட முஸ்லிம் அமையத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவர்கள் எமக்கான நீதியினை பெற்றுத்தர வேண்டும் மற்றும் அதற்கான அணைக்குழுவொன்று வேண்டும், எமது மீள்குடியேற்றத்தில் அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்ற முன்று அம்ச கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
இன்று யாழ் ஹொகதீன் பள்ளியில் நடைபெற்ற விஷேட தொழுகையினை தொடர்ந்து இவர்கள் கவனீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.








