ரணிலும், மைத்திரியும் என்னை அழைத்தனர் நான் செல்லவில்லை - பொன்சேகா
புதிய அரசாங்கத்தில் மக்கள் வைத்த எதிர்பார்ப்புக்கள் இன்னும் நிறைவேற்றப் படவில்லையென ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனை அவர் கூறியுள்ளார்.
சில அரச நிறுவனங்களில் இன்னும் ஊழல் மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவும், கரு ஜயசூரியவும், ரவி கருணாநாயக்கவும் தன்னுடைய வீட்டுக்கு வந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுத்தனர்.
இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கூட கூட்டணியில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அழைப்பு விடுத்தார்.இருப்பினும், தான் சகல அழைப்புக்களையும் புறக்கணித்ததாகவும் இதன்போது ஜனநாயகக் கட்சியின் தலைவர் நினைவுபடுத்தியுள்ளார்.








