Breaking News

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் - விஜயகலா

தமிழ் அர­சியல் கைதிகள் எவ்­வித நிபந்­த­னை­யு­மின்றி பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட வேண்டும். அர­சாங்க கட்­சியை சேர்ந்த நான் இவ்­வாறு கூறு­வ­தனால் எனது பதவி பறி­போ­கலாம். அதற்­காக நான் கவ­லைப்­படப் போவ­தில்லை என்று சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜய கலா மகேஸ்­வரன் தெரிவித்தார்.

கைதி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­கு­வது சாத்­தி­ய­மில்லை. அவர்கள் பிணையில் விடு­விக்­கப்­ப­டு­வார்கள் என அர­சாங்கம் எடுத்­தி­ருக்கும் முடிவு பற்றி பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறு­கையில்,

நவம்பர் 7 ஆம் திக­திக்கு முன் சகல அர­சியல் கைதி­களும் விடு­விக்­கப்­ப­டு­வார்கள் என அண்­மையில் அர­சாங்கம் வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தது. அந்த வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­பட வேண்டும். அதுவே மனி­தா­பி­மா­ன­மான நியதி. அர­சாங்க கட்­சி­யி­லி­ருக்கும் நான் இவ்­வாறு கூறு­வது ஒழுங்கை மீறு­வ­தாக இருந்­தாலும் மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யிலும் தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­பவர் என்ற வகை­யிலும் இதைக் கூறித்தான் ஆக­வேண்டும்.

நல்­லி­ணக்க ஆட்­சியின் தலை­வ­ராக விளங்கும் எங்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நினைத்தால் இக்­கா­ரியம் பெரிய விட­ய­மாக இருக்க முடி­யாது.எங்கள் அர­சியல் தமிழ் கைதிகள் தங்கள் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கோ குரல் கொடுப்­ப­தற்கோ யாரு­மே­யில்­லை­யென இறுதி முடிவு கண்ட பின்பு தான் உண்ணா விரதப் போராட்­டத்தில் இறங்­கி­னார்கள். நாங்கள் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­திகள் என்ற வகையில் அவர்­களை சென்று பார்­வை­யிட்டோம்.

நாங்கள் சென்­றி­ருந்த வேளை கைதிகள், பொது மன்­னிப்பு வழங்­கப்­பட வேண்­டு­மென்ற முடி­வி­லேயே இருந்­தார்கள். அர­சாங்கம் இவ்­வி­ட­யத்தை எவ்­வாறு பார்க்­கி­றதோ இல்­லையோ எனக்குத் தெரி­யாது. ஆனால் என்னைப் பொறுத்­த­வரை அர­சாங்கம் இவர்­க­ளுக்கு ஒரு நல்ல தீர்வை வழங்க வேண்டும். ஏனெனில் கடந்த 20 வரு­டங்­க­ளுக்கு மேலாக இந்த அப்­பாவி கைதிகள் சிறை­வாசம் அனு­ப­வித்­தி­ருக்­கி­றார்கள். இவர்கள் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு நீதி­மன்றால் தண்­டனை வழங்­கப்­பட்­டி­ருந்தால் கூட சிறை­வா­சத்தை முடித்துக் கொண்டு விடு­தலை பெற்­றி­ருப்­பார்கள்.

இக் கைதிகள் விடு­த­லை செய்யப்பட்டு தமது குடும்­பங்­க­ளுடன் சுதந்­தி­ர­மா­கவும் சந்­தோ­ஷ­மா­கவும் வாழக்­கூ­டிய நல்ல தீர்­வொன்றை அர­சாங்கம் கொடுக்க வேண்டும். அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை சட்டம், நீதி என்­ப­வற்றை கடைப்­பி­டிக்க வேண்­டு­மென்­ப­தி­லேயே கவனம் செலுத்­து­வார்கள். அதை நாங்கள் விமர்­சிக்­கவும் முடி­யாது. ஆனால் எங்­களைப் பொறுத்­த­வரை நாங்கள் அர­சி­யல்­வா­திகள். மக்­களின் நன்மை கரு­தியோ கோரிக்­கை­களை முன்­னிட்டோ செயல்­பட வேண்­டி­யுள்­ளது. தமிழ் அர­சியல் கைதி­களின் நன்மை கருதி மற்றும் எமது இனத்தின் விடு­தலை கருதி நாங்கள் பொது மன்­னிப்பு வழங்­குங்கள் என அர­சாங்­கத்தைக் கேட்­கிறோம். அதே­வேளை ஆளும் அர­சாங்கக் கட்­சியில் ஒரு உறுப்­பி­ன­ராக இருந்து கொண்டு பொது மன்­னிப்பு என்ற விட­யத்தை கோர முடி­யாது.

ஆனால் நான் அதற்கு அப்பால் மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் இக் கோரிக்­கையை முன்­வைக்­கின்றேன். ஒரு­வேளை நான் இவ்­வாறு கூறு­வ­தனால் எனது பதவி பறி போகலாம். அதற்­காக நான் பயப்­ப­ட­வில்லை. கவலை அடை­யப்­போ­வ­தில்லை. எவ்­வாறு இருந்த போதிலும் தமிழ் அர­சியல் கைதி­களை காப்­பாற்­று­வதே எனது நோக்­க­மாகும்.

தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­கு­வதில் கால­தா­ம­தமும் இழுத்­த­டிப்பும் இடம்பெறுவது உண்மை. எங்கள் அர­சாங்க கட்­சி­களில் இன­வா­தி­களும் இருந்து கொண்­டுதான் இருக்­கி­றார்கள். அவர்கள் அமைச்­ச­ர­வையில் கடு­மை­யாக எதிர்த்­தி­ருக்­கின்­றார்கள். இவர்­களைப் பொறுத்­த­வரை தேர்­தல்­களின் போது சிறு­பான்மை மக்­களின் ஆத­ரவு தேவை. ஆனால் வெற்றி பெற்று ஆட்சி அமைத்­ததன் பின்னர் சிறு­பான்மை இன மக்­களைப் பற்றி எவ்­வித கவ­லை­யு­மில்லை, கரி­ச­னையும் காட்­ட­மாட்­டார்கள். அடுத்த தேர்தல் வரும் வரை இதே நிலை தான். எனவே ஒரு சில இன­வா­தி­களின் சுய­ந­லத்­துக்­காக அர­சாங்கம் பாத­க­மான முடிவை எடுக்­காது என்று நம்­பு­கின்றேன். அதே­வேளை அர­சாங்கம் தன்­னையும் பாது­காக்க வேண்டும். மக்­களின் கோரிக்­கை­க­ளையும் நிறை­வேற்ற வேண்டும்.

ஜனா­தி­பதி முடி­வெ­டுத்தால் இந்த அர­சியல் கைதி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்க முடியும். அவ்­வாறு வழங்­கினால் அதை யாரும் தடுக்­கவும் முடி­யாது. அவர் தனது பிறந்த நாளை முன்­னிட்டோ அல்­லது சுதந்­திர தினத்தை முன்­னிட்டோ கைதி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­கலாம். துர­திர்ஷ்ட வச­மாக அது கடந்து விட்­டது. ஜனா­தி­பதி பத­வி­யேற்று 10 மாதங்கள் மாத்­தி­ரமே கடந்­துள்­ள­மையால் இந்த வாய்ப்பு இல்­லாமல் போய்­விட்­டது. இருந்த போதிலும் எங்கள் ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் நல்லதொரு முடிவை எடுப்பார் என்று நம்புகின்றேன்.

உண்மையான போராளிகள் என்று குற்றம் காணப்பட்டவர்கள் கடந்த அரசாங்கத்தில் சேர்க்கப்பட்டு, பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இன்று அவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அவ்வாறு இருக்கும்போது சந்தேகத்தின் பேரில் பிடிபட்டவர்கள் சிறைவாசம் அனுபவிப்பது அபத்தமானது என்றார்.