Breaking News

மஹிந்த – மைத்திரி யார் வந்தாலும் நாம் தேர்தலில் வெற்றியீட்டுவோம்! ஐ.தே.க.சூளுரை

அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள உள்ளூ ராட்சி மன்றத் தேர்­தலின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் மஹிந்த ராஜ­பக் ஷ ஆகியோர் ஒன்றுசேர்ந்து ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு ஆத­ரவு வழங்­கி­னாலும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வெற்­றியை எவ­ராலும் தடுத்து நிறுத்­த­மு­டி­யாது என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வித்தார்.

நடந்து முடிந்த பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எங்­க­ளுக்கு ஆத­ர­வாக இருக்­க­வில்லை. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியை வெற்­றிப்­பெற செய்­வ­தற்கே ஆத­ரவு வழங்­கினார். எனினும் நாம் பாரா­ளு­மன்ற தேர்­தலை வெற்றிக் கொண்டோம். ஆகையால் உள்­ளூராட்சி தேர்தல் ஒன்றும் எமக்கு சவால் அல்ல என்றும் அவர் குறிப்­பிட்டார்.

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கே நான் ஆத­ரவு வழங்­குவேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்த கருத்து தொடர்பில் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னதும் அந்த கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­னதும் தலை­வ­ராகும். எனினும் அவரை ஜனா­தி­பதி கதிரையில் அமர வைப்­ப­தற்கு முழு­மை­யான அர்ப்­ப­ணிப்பை செய்து, அவரை குறித்த கட்­சி­களின் தலை­வராக்கியதும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யாகும்.

இத்­த­கைய நிலையில் கட்­சியின் தலைவர் என்ற வகையில் தனது கட்­சியை வெற்றி பெற செய்­வ­தற்கே முழு­மை­யாக பங்­க­ளிப்­பினை வழங்­குவார். அதற்கு நாம் எந்­த­வ­கை­யிலும் இடை­யூறு விளை­விக்க மாட்டோம். எவ­ராலும் வீழ்த்த முடி­யாத சர்­வ­தி­கா­ரியை தோற்­க­டித்­தது ஐக்­கிய தேசியக் கட்­சி­யாகும். எனவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது கட்­சியை வெற்றி பெறச் செய்­வ­தற்கு முயற்­சிக்­கின்­ற­மை­யினால் எமக்கு எந்­த­வொரு பாதிப்பும் கிடை­யாது.

அவ்­வா­றாயின் நடந்து முடிந்த பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வேட்பு மனு பட்­டி­யலை தயா­ரித்தார். அவ­ரது கட்­சியின் வெற்­றிக்­கா­கவே அவர் முழு­மை­யான ஆத­ர­வினை வழங்­கினார்.

பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது கட்சி பிர­சார மேடை­க­ளுக்கு ஏற­ாவிட்­டாலும் உள்ளார்ந்தமாக முழு­மை­யாக கட்­சியை வெற்றி பெற செய்­வ­தற்கே அவர் பெரும் பாடுப்­பட்டார். குறித்த தேர்­தலின் போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு வேட்பு மனு வழங்கி அவரை தேர்­தலில் கள­மி­றக்­கி­யதும் அவ­ரே­யாகும். ் மஹிந்த ராஜ­பக்ஷ தேர்­தலில் கள­மி­றங்­கிய போதிலும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வையும் தோற்­க­டித்து ஆட்­சியை கைப்­பற்­றி­யது தனிக்­கட்­சி­யாக போட்­டி­யிட்ட ஐக்­கிய தேசியக் கட்­சி­யாகும். அவ்­வா­றான நாட்டின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்கும் தேர்­த­லிலும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான எமக்கே வெற்றி கிடைத்­தது.

அவ்­வா­றாயின் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் ஒன்றும் எமக்கு பெரிய விட­ய­மல்ல. அடுத்த வருடம் உள்ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ளது. இந்­நி­லையில் அதற்­கான முன்­னேற்­பா­டு­களை அர­சாங்கம் மும்­மு­ர­மாக செய்து வரு­கின்­றது. ஆகவே உள்ளூராட்சி மன்ற தேர்­தலின் போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோரும் ஒன்­றி­ணைந்து ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு ஆத­ரவு வழங்­கி­னாலும் தேர்­தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.

முன்னைய அரசாங்கத்தில் இருந்த ஊழல் மோசடிக்காரர்களை நாம் இணைத்து கொள்ளவில்லை. ஊழல் மோசடிக்கார்களுடன் எமக்கு எந்தவொரு தொடர்பும் கிடையாது. பாராளுமன்றத்தின் ஆட்சி எமது கைகளில் இருக்கும் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் அல்ல என்றார்.