Breaking News

நடாலுக்கு மேலும் அடி - ஜோகோவிச்க்கு வெற்றி!


ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி ​நேற்று நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சும், 8-ம் இடத்தில் இருக்கும் நடாலும் பலப்பரீட்சை நடத்தினார்கள். 

சமீப காலமாக சொதப்பி வரும் நடால் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இருந்தாலும், பலம்வாய்ந்த ஜோகோவிச்சை வீழ்த்துவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

ஆனால், ஜோகோவிச் 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சீன ஓபனுக்குப்பிறகு பிறகு ஜோகோவிச் உடன் நடால் 8 முறை மோதியுள்ளார். இதில் 7 முறை தோல்வியை சந்தித்துள்ளார். 

ஜோகோவிச் தொடர்ச்சியாக 29 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். அதில் ஆறு சாம்பியன் அடங்கும்.