ஊடகவியலாளர்களுக்கான விசேட நலன்புரித் திட்டம் – ஊடக அமைச்சர்
ஊடகவியலாளர்களுக்கான விசேட நலன்புரித் திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட் டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பில் அமைச்சரவைக்குத்தாம் சமர்ப்பித்த பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் இறக்குமதித் தீர்வையுடனான மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
இலங்கை பத்திரிகைப் பேரவையின் 60வது நிறைவு விழா கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.








