Breaking News

யுத்தக் குற்றம்: உண்மையை ஒப்புக்கொண்டால் மன்னிப்பு!

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையின்போது, உண்மையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள ஊடகமொன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

விசாரணையின்போது குற்றங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் வழக்குத் தொடரக்கூடிய சம்பவங்கள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் மதத்தலைவர்கள் உள்ளடங்களாக உருவாக்கப்படவுள்ள கருணைச் சபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது குற்றத்தை ஒப்புக்கொள்வோருக்கு மன்னிப்பு வழங்கப்படவுள்ள அதேவேளை, அவ்வாறு ஒப்புக்கொள்ள தவறுபவர்களுக்கு எதிராகவே நீதிமன்றில் வழக்குத் தொடரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யுத்தக் குற்றம் தொடர்பான உள்நாட்டு பொறிமுறைக்கு பாதிக்கப்பட்டோரும் புலம்பெயர் தமிழ் சமூகமும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், யுத்தக்குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதானது இலங்கை எந்தளவு உலக நாடுகளை வெற்றிகொள்ளும் என்பது சந்தேகத்திற்கிடமான ஒன்றாகவே உள்ளது.