Breaking News

யாழ்.குடிநீர்த் தேவைக்காக 483 மில்லியன் ரூபாவில் 5 திட்டங்கள்

யாழ். மாவட்டத்தில் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 483.06 மில்லியன் ரூபா பெறுமதியான 5 புதிய செயற்றிட்டங்கள்
நடைமுறைப்படுத்தப் படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் அனைத்தும் 2015 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டுக்கு இடையில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருபாலை நீர் வழங்கலை செயற்படுத்த 64.51 மில்லியன் ரூபாவும் பருத்தித்துறை நீர்வழங்கல் திட்டத்திலிருந்து இன்பசிட்டி, சக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு நீர்வழங்க 33.17 மில்லியன் ரூபாவும் பொக்கணையிலிருந்து சுன்னாகம் நிலாவரை பகுதிக்கு நீர் வழங்க 35 மில்லியன் ரூபாவும் வல்வெட்டித்துறை நீர்வழங்கல் திட்டத்திலிருந்து அக்கரைக்கு நீர் வழங்க 12 மில்லியன் ரூபாவும் யாழ். மாவட்ட கிராமிய மட்டத்திலான நீர் வழங்கலை செயற்படுத்த 338.38 மில்லியன் ரூபாவும் தேவைப்படுகின்றது.

இந்தச் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதி மத்திய அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளதுடன் நிதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் தேசிய நீர் வழங்கல் அதிகார சபையினூடாக இந்த செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.